கனடாவில் பரபரப்பு : இந்துக்கோவில் தலைவரின் மகனின் வீட்டில் தாக்குதல்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் கோவில் தலைவருமான சதீஷ் குமார் இலட்சுமி நாராயணனின் மூத்த மகன் வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
14 தடவைகள்(ரவுண்ஸ்) மேற்கொள்ளப்பட்டமையால், குறித்த நபரின் விடு முற்றிலும் சேதமாகியுள்ளதோடு, யாருக்கும் எதுவித காயங்களும் ஏற்படவில்லை.
இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அப்பகுதியில் கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள்
துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து தீவிரவாத விசாரணை நடந்து வருகிறது.
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள், இந்து கோவில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
சர்ரேரில் உள்ள லட்சுமி நாராயண் கோவில் மீது மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில்தான் கோவில் நிர்வாகியின் மகன் வீடு மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதனால் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வங்கிகளில் கடன்களை செலுத்த தவறியவர்களே பரேட் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர் : மத்திய வங்கியின் ஆளுநர் வலியுறுத்து
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |