லலித்தின் தந்தை காவல்துறை தலைமையகத்தில் வாக்குமூலம்
லலித், குகன் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு காவல்துறை தலைமையத்தில் லலித்தின் தந்தை ஆறுமுகம் வீரராஜா வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
லலித், குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் என்றும், காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களிற்கும் இந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஆறுமுகம் வீரராஜா கூறியுள்ளார்.
கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வழக்கில் நல்ல முடிவு
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ''எனது மகன் காணாமல்போய் 14 வருடங்களாகின்றன, முறைப்பாடொன்றை செய்வதற்காக சிஐடி அலுவலகத்திற்கு சென்றோம்.
இதிலாவது நல்லது கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். நாளைமறுதினம் வழக்கு நடைபெறவுள்ளது. வழக்கில் நல்ல முடிவு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கின்றோம்.
இதற்கமைய லலித், குகன் மாத்திரமல்ல பத்து, பதினைந்து இருபதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளனர்.
மேலும், அவர்களின் குடும்பத்தவர்கள் பரிதவிக்கின்றனர். அவங்களிற்கும் ஒரு நீதி கிடைக்கவேண்டும், எங்களிற்கும் நீதி கிடைக்கவேண்டும்.
எனது பிள்ளைக்கும் ஏனையவர்களிற்கும் நீதி கிடைக்குமாக இருந்தால் நான் இந்த அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பேன்“ என கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள விடுதலைப்புலிகள் தலைவருக்கான வீரவணக்கம்! ஆதாரம் கோரும் முன்னாள் போராளி
