லலித் பத்திநாயக்க பதவியிலிருந்து நீக்கம்!
காவல்துறை நிர்வாகப் பிரிவின் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் லலித் பத்திநாயக்க, ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்டு அந்தப் பதவியில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளார்.
தேசிய காவல்துறை ஆணையத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக லலித் பத்திநாயக்க தொடர்ந்தும் பணியாற்றுவார்.
பதில் காவல்துறை மா அதிபர்
மேற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன நீக்கப்பட்டதால் வெற்றிடமாக உள்ள காவல்துறை நிர்வாகப் பிரிவின் பொறுப்பான மூத்த காவல்துறை மா அதிபர் பதவிக்கு நியமிக்க தேசிய காவல்துறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தற்போது பதில் காவல்துறை மா அதிபராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |