துருப்பு சீட்டாக்கப்பட்ட காணி விவகாரம் - மீளப்பெற்ற அரச வர்த்தமானி: சுமந்திரனின் அறிவிப்பு
வடக்கு மாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளபெற்றமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமைச்சரவைக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) நன்றி தெரிவித்துள்ளார்.
காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரித்த வர்த்தமானியை மீள்கைவாங்குவதாக செய்தி வெளியாகியுள்ளதாகவும் தாம் விதித்த காலக்கெடுவுக்கு முன் இத் தீர்மானம் எடுக்கப்படுள்ளதாகவும் இது உடனடியாக இன்றிரவே வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர், ”ஜனாதிபதிக்கு இன்று (27) இலங்கை தமிழரசுக்கட்சி எழுதிய கடிதமொன்றையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சட்ட ஆலோசனை நடவடிக்கைகள்
அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”மேற்படி வர்த்தமானி அறிவிப்பில் அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான நிலங்கள் அமைந்துள்ள வடமராட்சி கிழக்கு முல்லைத்தீவில் மூன்று சட்ட ஆலோசனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
முன்னர் அனுப்பிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டதற்கு மேலதிகமாக சுனாமிக்கு பின்னர் அரசாங்க பொறிமுறைகள் மூலம் பணம் கொடுக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் ஊடாக பலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் அவற்றிற்கான உறுதிகள் எவையும் பலருக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் இந்த காணிகளில் வீடுகளில் 10 வருடங்களிற்கு மேல் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த தருணத்தில் இந்த சட்டத்தை பிரயோகிப்பது இன்னமும் குழப்பகரமான நிலையை உருவாக்கும்.
இந்த பகுதிகளில் காணி நிர்ணய கட்டளை சட்டத்தின் விதிகளை குறிப்பாக இந்த காலகட்டத்தில் பயன்படுத்துவதுமிகவும் பொருதமற்றது என்பதை நாங்கள் மீள வலியுறுத்துகின்றோம்.
பாரிய சமூக அமைதியின்மை
இந்த திட்டத்தை முன்னெடுத்துச்செல்வதுதாங்கள் எந்த தவறும் இழைக்காத நிலையிலும் தங்கள் நிலங்களிற்கு முழுமையாக உரிமை கோரும் நிலையிலும் இல்லாத பலருக்கு பாரிய சிரமங்களை ஏற்படுத்தும்.
இந்த செயற்பாடு தமிழ் மக்களிடையே பாரிய சமூக அமைதியின்மையை உருவாக்கும் என்பதுடன்போருக்கு பின்னரான சூழலில் நல்லிணக்கத்தை பாதிப்பதாக அமையும்.
அத்தோடு ஏராளாமான தனியார் நிலங்கள் இன்னமும இராணுவகட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்பதுடன் தேர்தல் வாக்குறுதியில் நீங்கள் விடுவிப்பதாக கூறியும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.
எனவே மேலும் தாமதிக்காமல்மேற்படி வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு மீண்டும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம். இல்லையெனில் இது எமது மக்களை வெகுஜன பகிஷ்கரிப்புகளிலும் சட்டமறுப்பு போராட்டங்களிலும் நாம் வழிநடத்தவேண்டிய நிலையேற்படும்.
நல்லிணக்கம் சம்பந்தமாக உங்கள் அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவில் இருத்திஇவ்வர்த்தமானி பிரகடனத்தை உடனடியாக மீள கைவாங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ்பிரசுரித்த வர்த்தமானியை மீள்கைவாங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. நாம் விதித்த காலக்கெடுவுக்கு முன் இத் தீர்மானம் எடுக்கப்படுள்ளது. இது உடனடியாக இன்றிரவே வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் https://t.co/Fxx6Vv5az6
— M A Sumanthiran (@MASumanthiran) May 27, 2025
காணி நிர்ணய்சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரிக்கப்பட்ட 28.03.2025 ஆம் திகதிய வர்த்தமானியை இரத்துச் செய்ததைக்காக அதி மேதகு ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகள். இக் கடிதம் இன்று அனுப்பப்பட்டது. pic.twitter.com/H1dOE24axb
— M A Sumanthiran (@MASumanthiran) May 27, 2025
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
