வடக்கில் மீள்குடியேற்ற மக்களுக்கு நிதி உதவி - காணி உறுதிப் பத்திரங்கள் கையளிப்பு
யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க வடக்கில் இடம்பெயர்ந்த 197 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரம் மற்றும் தலா 38 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகளை வழங்கி வைத்துள்ளார்.
இதற்கான நிகழ்வு அதிபர் தலைமையில் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வின் ஓர் அம்சமாக இந்த நிகழ்வு இடம்பெறுவதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை அதன் உரிமையாளர்களான பொது மக்களிடம் மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 33 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த மக்கள் தமது காணிகள் மீளக் கிடைத்ததையிட்டு அதிபருக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.


அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்