திருகோணமலையில் காணி பிரச்சினை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Human Rights Commission Of Sri Lanka Trincomalee Sri Lanka
By Harrish Oct 01, 2024 02:01 PM GMT
Report

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்வேரி கிராமத்தினை சேர்ந்த பொதுமக்கள் காணி விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

குறித்த முறைப்பாடு நேற்று (30) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள் தொடர்பில் அநுர எடுத்துள்ள அந்த முடிவு

எரிபொருள் தொடர்பில் அநுர எடுத்துள்ள அந்த முடிவு

ஆணைக்குழுவில் முறைப்பாடு

வெல்வேரி கிராம பகுதியில் வசித்துவந்த 31 குடும்பத்தினர்களது 42 ஏக்கர் குடியிருப்புக் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாது காணப்படுகின்றது.

இந்த நிலையில் அந்த காணிகளில் 35 ஏக்கர் காணிப்பகுதியானது பெரும்பான்மையினத்தினை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு அரசினால் குத்தகை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தே பாதிக்கப்பட மக்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

திருகோணமலையில் காணி பிரச்சினை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Land Issue In Trincomalee

அத்துடன், உள்நாட்டு யுத்தம் காரணமாக குறித்த கிராமத்தவர்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில் அவர்கள் மீளக் குடியேற முற்பட்டபோது அவர்களது காணிப்பகுதிகளை அரசானது கையகப்படுத்தியதோடு யுத்தம் முடிந்து பல வருடங்கள் கழிந்த நிலையில் அந்த காணிகளில் இன்று வரை மீளக்குடியேற முடியாத நிலையில் காணப்படுவதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டு கலவரம்

1983ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின் போது தாம் இடம்பெயர்ந்து மீளக் குடியமர்ந்ததன் பின்னர் 1990ஆம் ஆண்டுகளிலும் இடம் பெயர நேரிட்டதாகவும் அதன் பின்னராக அவர்களது வீடுகள் இருந்த பகுதிகளில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்ததால் அப்போது மீளவும் குடியேற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் காணி பிரச்சினை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Land Issue In Trincomalee

இதையடுத்து, வனஜீவராசிகள் திணைக்களம் அந்த பகுதியில் எல்லையிட்டதன் பின்னராக தற்போது அங்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதுடன் அவ்வாறு எல்லையிடப்பட்ட பகுதிகள் அரச இயந்திரங்கள் மூலமாக பெரும்பான்மையினத்தினை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்க்கடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

திருகோணமலையில் காணி பிரச்சினை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Land Issue In Trincomalee

மேலும், இந்த விடயம் தொடர்பில் பல தரப்பட்ட மட்டங்களில் முறையிடப்பட்டிந்த போதிலும் தகுந்த பதில் கிடைக்கப்பெறாத நிலையில் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உயர் தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு வெளியான அறிவிப்பு

உயர் தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு வெளியான அறிவிப்பு

அரசியல் தலையீடு ஏற்பட்டால் பதவியிலிருந்து விலகுவேன்! வடக்கு ஆளுநர் அதிரடி

அரசியல் தலையீடு ஏற்பட்டால் பதவியிலிருந்து விலகுவேன்! வடக்கு ஆளுநர் அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்