தமிழர் பகுதியில் மக்கள் காணிகளை ஆக்கிரமிக்க திட்டம்: கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நகர்வு

Tamils Vavuniya Sri Lanka Sri Lankan Peoples
By Raghav Jun 11, 2024 04:23 PM GMT
Report

வவுனியா (Vavuniya) - கதிர்வேலர் பூவரசங்குளத்தில் காணிகளை அளவீடு செய்வதற்காக வருகை தந்த வனவள திணைக்களத்தினர், பொதுமக்களின் எதிர்ப்பினை அடுத்து திருப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வன வளத்திணைக்களத்திற்குரிய காணிகள் இருப்பதாக தெரிவித்து அந்த திணைக்களத்தின் அதிகாரிகள் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள இன்று (11) வருகை தந்திருந்த நிலையிலேயே, இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கதிர்வேலர் பூவரசங்குளத்திலிருந்து 1997 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் 2011 ஆம் ஆண்டு குறித்த பகுதியில் மீள்குடியேறியிருந்தனர்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை: சட்ட நடவடிக்கையை கோரும் செந்தில் தொண்டமான்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை: சட்ட நடவடிக்கையை கோரும் செந்தில் தொண்டமான்

வன வளத்திணைக்களம்

அவர்கள் வசித்த பிரதேசம் அனைத்தும் பற்றை காடுகளாக மாறியுள்ள நிலையில், தற்போது அவர்கள் குறித்த பகுதியை துப்புரவு செய்து விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர் பகுதியில் மக்கள் காணிகளை ஆக்கிரமிக்க திட்டம்: கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நகர்வு | Land Issue Vavuniya

இந்நிலையில், குறித்த பகுதியில் வன வளத் திணைக்களத்திற்குரிய காணிகள் இருப்பதாக தெரிவித்து வனவள திணைக்களத்தினர் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள குறித்த கிராமத்துக்கு வருகை தந்திருந்தனர்.

பொதுமக்களுடைய வயல் நிலங்கள் மற்றும் தோட்டம் செய்கின்ற பகுதிகளையும் வனவளத்திற்கு உரியதாக அடையாளப்படுத்தி இருந்தமையினால் அவர்களை குறித்த பகுதியில் அளவீடு செய்ய விடாது பொதுமக்கள் அவர்களோடு முரண்பட்டனர்.

அதிபர் தேர்தலில் ரணில் வெற்றி பெற முடியாது : முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திட்டவட்டம்

அதிபர் தேர்தலில் ரணில் வெற்றி பெற முடியாது : முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திட்டவட்டம்

அளவீட்டுப் பணி

தமது கிராமத்துக்குரிய கிராம சேவையாளரை அழைத்து வருமாறும் அதன் பின்னரே அளவீட்டுப் பணியை மேற்கொள்ள அனுமதிப்போம் என்றும் தாம் விவசாயம் செய்யும் பகுதியை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

தமிழர் பகுதியில் மக்கள் காணிகளை ஆக்கிரமிக்க திட்டம்: கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நகர்வு | Land Issue Vavuniya

மேலும், தாங்கள் விவசாயம் செய்யும் பகுதியை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது எனவும் மக்கள் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து அங்கு வருகை தந்திருந்திருந்த வனவள திணைக்களத்தினர், தாம் செய்மதி ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை சரி பார்ப்பதற்காகவே வந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த சர்ச்சையை அடுத்து வனவளத் திணைக்களத்தினர் குறித்த பகுதியிலிருந்து சென்றதோடு, அங்கிருந்த பொதுமக்களும் கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

யாழில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

யாழில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரகசிய சுரங்கப்பாதை

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரகசிய சுரங்கப்பாதை

யாழில் தொடரும் பசுவதை: இறைச்சியாக்கப்பட இருந்த கன்றுத்தாச்சி பசு மீட்பு

யாழில் தொடரும் பசுவதை: இறைச்சியாக்கப்பட இருந்த கன்றுத்தாச்சி பசு மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026