நிலாவெளியில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணி! சி.ஐ.டியில் முறைப்பாடு
திருகோணமலை நிலாவெளி அடம்போடை பகுதியில் சிறு மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாரத்தை பாதுகாக்குமாறு கோரி கொழும்பு குற்றவியல் திணைக்களத்தில் இன்று முறைப்பாடு ஒன்று பதிவ செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த நிலாவெளி சிறு மீன்பிடியாளர் சங்கத்தின் தலைவர்,
'' நாங்கள் சுமார் 450 குடும்பங்கள் உள்ளோம். எமது மீன் பிடியை மேற்கொள்ளும் காணியான சுமார் 150 ஏக்கர் காணியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
காணி மோசடி
இது தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள துறை சார் அதிகாரிகளிடத்தில் முறையிட்டோம். எதுவித பலனும் இல்லை.

இதனால் தற்போது கொழும்பு குற்றவியல் திணைக்களத்தில் காணி மோசடி பிரிவில் முறைப்பாடு செய்துள்ளோம்.
மேலும் ஜனாதிபதி செயலகம், கடற்றொழில் அமைச்சு உள்ளிட்ட முக்கிய அரச திணைக்களங்களிலும் முறையிட்டுள்ளோம்.
இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தருமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்” என ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |