நயினாதீவு விகாராதிபதி -அரசாங்க அதிபர் சந்திப்பு
நயினாதீவு விகாராதிபதி வண. நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ தேரர் இன்றைய தினம் (04.01.2026) காலை. 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தசந்திப்பில் தையிட்டி விகாரை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்க அதிபரால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக வணக்கத்திற்குரிய விகாராதிபதி கேட்டறிந்து கொண்டார். மேலும் வணக்கத்திற்குரிய விகாராதிபதி தமது பக்க நிலைப்பாடுகளையும் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தார்.
விகாரை கட்டியமை மகா தவறு
இதேவேளை தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து தையிட்டியில் விகாரை கட்டியமை மகா தவறு. அதனை பௌத்த துறவி செய்திருக்கக் கூடாது என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி சிறீ நவடகல பதும கீர்த்தி திஸ்ஸ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |