தேங்காய் எண்ணெயின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், கடந்த இரண்டு வாரங்களில் சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
குறித்த விடயத்தை தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
தேங்காய்களின் விலை
அத்துடன் தாவர எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தரவுகளின் அடிப்படையில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உள்நாட்டு சந்தையில் தேங்காய்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காயின் விலை ரூ. 122 - 124 வரை இருந்த நிலையில், சில்லறை விற்பனையாளர்கள் ஒரு தேங்காயை ரூ. 180 முதல் 200 வரை விற்பனை செய்கின்றது.
ஏலத்தில் குறைந்த விலைக்கு தேங்காய்களை வாங்கி, நுகர்வோருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யும் இடைத்தரகர்களே இந்த விலையேற்றத்திற்குக் காரணம் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் பணிப்பாளர் சுனிமல் ஜயகொடி சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் இல் இணைந்து கொள்ளுங்கள்...! |