மயிலிட்டியில் 21ஆவது வாரமாக தொடரும் நில மீட்புப் போராட்டம்!

Sri Lanka Army Tamils Jaffna Protest
By Theepan Sep 11, 2026 10:58 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மயிலிட்டியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் (11.09.2026) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

ஷிரான் பாசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது !

ஷிரான் பாசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது !

வெளியேறாத பாதுகாப்பு தரப்பினர் 

இந்தநிலையில் யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே உள்ளது.

மயிலிட்டியில் 21ஆவது வாரமாக தொடரும் நில மீட்புப் போராட்டம்! | Land Reclamation Protest In Mayiliddy 21St Week

தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வருவதுடன் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.

இந்தநிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர், காணி உரிமையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

செஸ் வரியை நீக்குவதற்கு திட்டம் : அமைச்சர் அறிவிப்பு

செஸ் வரியை நீக்குவதற்கு திட்டம் : அமைச்சர் அறிவிப்பு

ஆறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் மாபெரும் போராட்டம்: பொதுமக்களுக்கு அழைப்பு

ஆறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் மாபெரும் போராட்டம்: பொதுமக்களுக்கு அழைப்பு

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021