தமிழரின் காணிகளை விடுவியுங்கள் : ஜனாதிபதியிடம் நயினாதீவு விகாராதிபதி எடுத்துரைப்பு
இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுப்புக்கள் சாத்தியம் என்பதால் காணிகளை விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியுள்ளதாக நாக தீப விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
நயினாதீவுக்கு நேற்றுமுன்தினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி,தன்னை சந்தித்து, கலந்துரையாடியமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே நாக தீப விகாராதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் . அந்த விகாரையை சுற்றியுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை அவர்களிடமே கையளிக்க வேண்டும்.
காணி கையளிப்புக்கள் இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே சாத்தியமாகும் எனவே உங்கள் காலத்திலேயே காணிகளை கையளியுங்கள் என ஜனாதிபதியிடம் கூறினேன் என தெரிவித்தார்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |