நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காக பயன்படவுள்ள மண்சரிவுகளால் குவிந்த மண்!
டித்வா புயல் நிலைமையால் ஏற்பட்ட மண்சரிவுகளால் குவிந்த மண்ணை நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காகவும், முறையான பொருளாதார திட்டங்களுக்காகவும் மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதன்படி, மண்சரிவினால் அதிகளவில் சேதமடைந்த நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளை புனரமைப்பதன் மூலம் 3-4 இலட்சம் கியூப் அளவிலான மண் குவிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வீதி புனரமைப்பு
சுற்றுச்சூழல் அமைச்சர் இது தொடர்பாக புவியியலாளர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்கு இவ்வாறு குவிந்த மண்ணை முறையாக மீண்டும் பயன்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.
வீதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாகாண வீதி மேம்பாட்டு அலுவலகத்தின் கீழ் வீதிகளின் இருபுறமும் புனரமைப்பதன் மூலம் இந்த மண் குவிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |