சற்றுமுன்னர் 05 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்(The National Building Research Organization) 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில்,
பதுளை(Badulla) மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் ஹப்புத்தளை பகுதிகளுக்கும் கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர மற்றும் உடுநுவர பிரதேசங்களுக்கும் மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை
அத்துடன், கேகாலை(Kegalle) மாவட்டத்தில் மாவனெல்ல, தெஹியோவிட்ட, கலிகமுவ, வரகாபொல மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல்(Kurunegala) மாவட்டத்தின் மாவத்கம பிரதேசத்திற்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் இம்புல்பே, இரத்தினபுரி(Ratnapura) மற்றும் பலாங்கொட பிரதேசங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவதானத்துடன் இருக்குமாறு
எனவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |