தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது மாணவி: சந்தேக நபர் கைது
பாடசாலை மாணவியொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலை பேருந்து சேவை சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, 15 வயது பாடசாலை மாணவியொருவரே பாதிக்கப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய(Kuliyapitiya) தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பேருந்து சாரதி மாணவியை ஏமாற்றி ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று காரொன்றில் வைத்து தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
இதன்போது, குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பாடசாலை பேருந்து சேவையின் சாரதியான இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, சந்தேகநபரும் பாதிக்கப்பட்ட மாணவியும் பாடசாலை பேருந்து சேவையின் போது அறிமுகமாகியுள்ள நிலையில் இருவரும் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |