ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை...! வெளியான அறிவிப்பு
Sri Lanka
Department of Meteorology
Climate Change
Weather
By Shalini Balachandran
மழைக் காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, கொழும்பு, கண்டி, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சி
அத்தோடு, கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹுபிட்டிய ,ருவன்வெல்ல மற்றும் மாவனெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, அடுத்த மூன்று நாட்களுக்கு மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்