மாத்தளையில் மண்சரிவு அபாயம்: அவதியில் சிக்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள்!
மாத்தளை(Matale) - இறத்தோட்டை பிரதேச செயலத்திற்குட்பட்ட மிட்லண்ட்ஸ் இறப்பர்மலைத்தோட்டப் பகுதியில் மண்சரிவு அபாயம் மற்றும் நிலவெடிப்பு காரணமாக அங்கு குடியிருப்புக்களில் வசிக்கும் 38 குடும்பங்களைச் சேர்ந்த, 150 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே, அந்த பிரதேசத்திலுள்ள மக்களை இடம்பெயறுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள்
இதன்போது, இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிகமாக சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் மற்றும் அவர்களின் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
மண்சரிவு அபாயம் காரணமாக உடனடியாக அம்மக்களை அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றியமையால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பெறும் சிரமங்களுக்கு மத்தியில் தங்கியுள்ளனர்.
இவர்கள் போதிய அடிப்படை வசதிகளின்றி தங்கிவருகின்ற நிலையில், 2012ஆம் அனர்த்ததிற்குளானதையடுத்து வீட்டுத்திட்டங்களில் சில குடும்பங்களுக்கான வீடுகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பழைய குடியிருப்புக்களில் வசித்து வருபவர்கள் தொடர்பில் தகுந்த நடவடிக்கையினையெடுக்குமாறு அரசிடம் இந்த பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |