பராக்கிரமபாகு மன்னனுக்கு பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்கவுள்ள சிறிலங்கா கடற்படை : அதிபர் ரணில் பெருமிதம்
செங்கடல் ஊடாக இலங்கைக்கு வரும் சரக்குக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கொழும்பு உள்ளிட்ட இலங்கை துறைமுகங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின் பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்க இலங்கையில் இருந்து கப்பல்கள் அனுப்பப்படுவது இதுவே முதல் தடவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிய பொருளாதார இழப்பை சந்திக்கும்
இந்தக் கப்பலை செங்கடலில் நிலைநிறுத்தி அந்த நடவடிக்கைகளில் ஆகும் செலவைப் பார்க்கும் போது, கப்பல்கள் இலங்கைக்கு வராததால் நாடு பாரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் என அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா கடற்படை இணக்கம்
ஹவுத்தி அமைப்பினரின் அச்சுறுத்தலை அடுத்து பல கப்பல்கள் செங்கடலைக் கடந்து வேறு வழித்தடங்களில் செல்வதால் போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பாதுகாப்பிற்காக கப்பல் ஒன்றை செங்கடலுக்கு அனுப்ப சிறிலங்கா கடற்படை இணங்கியுள்ளதாகவும் அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |