முடங்கப் போகும் சுற்றுலாத்துறை: பாரிய சவாலுக்கு முகங்கொடுக்கவுள்ள சிறிலங்கா!
இலங்கைக்கான இறக்குமதி தடையால் சுற்றுலாத்துறை பாதிக்கும் அபாயம் உள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் 300க்கும் அதிகமான பொருட்களுக்கான இறக்குமதி தடை அரசாங்கம் தடை விதித்து இருந்தது.
அதேவேளை, கழிப்பறைக்கு பயன்படுத்தப்படும் திசு (Tissue) உட்பட பல இறக்குமதி பொருட்களின் இறக்குமதிக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் கழிவறை திசுக்கள் உட்பட பல சுகாதாரப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சந்தை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சுற்றுலாத் துறைக்கு பாரிய பாதிப்பு
விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக குறித்த பொருட்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்ய முடியாது எனவும், இதனால் அரசாங்க வைத்தியசாலைகள், தனியார் வைத்தியசாலைகள், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றின் சுகாதார சேவைகளை பேண முடியாத நிலை ஏற்பட்டுள்ளன.
மேலும், இந்த ஆண்டு 10 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், இந்த இறக்குமதி தடை நடைமுறைப்படுத்தப்பட்டமையினால், எதிர்காலத்தில் சுற்றுலாத் துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
கொரோனா தொற்றுநோய்
தற்போதைய கொரோனா தொற்றுநோய் சூழ்நிலையில் இலங்கை மக்கள் தங்கள் தனிப்பட்ட சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் குறித்த தயாரிப்புகள் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
இந்நிலையில், கடந்த வருடங்களில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிகளால் வீழ்ச்சி கண்ட சுற்றுலாத்துறை, தற்போதைய காலப்பகுதிகளில் வளர்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

