யாழ். உட்பட நாட்டிலுள்ள சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
நாட்டில் பண்டிகைக் காலத்தில் வாகனங்களை செலுத்தும் போது அவதானமாக செயற்படுமாறு வாகன சாரதிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்படி, போக்குவரத்து விதிகளுக்கு அமைய வாகனங்களை செலுத்துமாறும், மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, புத்தாண்டை முன்னிட்டு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் தொடர்பில் எச்சரிக்கை
இதேவேளை, புத்தாண்டு காலத்தில் குழந்தைகளை விபத்துகளிலிருந்து பாதுகாக்க பெரியவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தாண்டு காலத்தில் நாடு முழுவதும் விபத்துகள் அதிகரிப்பது ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும் ஒரு பொதுவான நிகழ்வாகும்.
இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
