நம்மவர் பொங்கல் விழாவில் கலந்து சிறப்பித்த கொழும்பு விவேகானந்த சபையின் உபதலைவர்!
லங்காசிறியின் நம்மவர் பொங்கல் விழா பலரது அனுசரணையுடனும், ஆதரவுடனும் வெகு விமர்சையாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.
தெகிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர விஸ்ணு தேவஸதானத்தில் நடைபெற்ற இந்த பொங்கல் விழா, மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளுடன் மேலும் மெருகேறியிருந்தது.
இதேவேளை, அன்றைய தினம் நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக கொழும்பு , காக்கைதீவு இந்து மன்ற தலைவரும், கொழும்பு விவேகானந்த சபையின் உபதலைவரும், இந்து மாமன்ற உபசெயலாளருமான தியாகராஜா தயாநிதி அவர்கள் கலந்துக்கொண்டிருந்தார்.
வேலைப்பளுவுக்கு மத்தியிலும் எங்களுடைய அழைப்பையேற்று லங்காசிறி ஊடகம் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்திருந்த நம்மவர் பொங்கல் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டிருந்தார்.
இதேவேளை, தற்போதைய இளம் தலைமுறையினருக்கு மிகவும் அவசியமான, கடைபிடிக்க வேண்டிய பல விடயங்களையும் அவர் அன்றைய தினம் தெரிவித்திருந்தார்.
அன்றைய தினம் எங்களுடன் இணைந்திருந்து, ஆதரவு வழங்கியமைக்காக தியாகராஜா தயாநிதி அவர்களுக்கு இதயபூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறது லங்காசிறி ஊடகம்.
காணொளி - https://www.facebook.com/share/v/17mu9wSrJZ/
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






