கனடாவின் வான்கூவர் திருவிழாவில் கோர விபத்து : பலர் உயிரிழப்பு
கனடாவில் (Canada)நடைபெற்ற லாபு லாபு தின தெரு விழாவில் (Lapu Lapu Day street festival) பங்கேற்ற மக்கள் மீது கார் மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (26.04.2025) இரவு 8.00 மணியளவில் வான்கூவார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கருப்பு நிற எஸ்யூவி வாகனம் ஒன்று அதிவேகமாக திருவிழா பகுதிக்குள் புகுந்து, அங்கிருந்த ஏராளமான மக்களை இடித்துத் தள்ளியுள்ளது.
மேலும், அந்த வாகனத்தை ஓட்டியவர் ஒரு இளம் ஆசிய இளைஞராகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Additional footage from the scene of the incident at the Lapu Lapu Festival in Vancouver, Canada, in which an individual drove through a crowd of festivalgoers on a closed-off street, with reports right now suggesting 5-10 fatalities and well over a dozen injuries. The suspect is… pic.twitter.com/WNfYp9mXDh
— OSINTdefender (@sentdefender) April 27, 2025
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
