உங்களால் இது நடக்கும் : ராஜபக்சக்கள் தொடர்பில் லசந்த எழுதிய கடிதம்
மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க இறப்பதற்கு முன்பாக ராஜபக்சர்களுக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் அந்தக் கடிதத்தை தான் பலமுறை வாசித்ததாகவும் அப்போது உண்மையில் கண்ணீர் வரும் எனவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.
அந்தக்கடிதத்தில் “நான் உங்களோடு பேசிய போது நீங்கள், நாங்கள் என்று பேசியதில்லை. நீ , நான் என்று தான் பேசினேன். அவ்வளவு நெருக்கமாக இருக்கும் எனக்கு என்றோ ஒரு நாள் உங்களால் இது நடக்கும்“என முன்கூட்டியே சொல்லியிருக்கின்றார் என குறிப்பிட்டார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் இராணுவம் வீதி வீதியாக சுடுகின்ற காலத்தில் சிரித்திரன் சிவஞானம் வரைந்த கேலிச்சித்திரத்தில் யாழ்ப்பாணத்தில் மனிதர்கள் மாதிரி சுடுகின்றார்கள் என்று மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார்” என தெரிவித்தார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்