லாப் எரிவாயு விலையில் மாற்றம் வருமா -வெளியானது அறிவிப்பு
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ள போதிலும் ஓகஸ்ட் மாதத்தில் லாப் எரிவாயு விலையிலும் மாற்றம் இருக்காது எனவும் ஜூலை மாத விலைக்கே எரிவாயு விற்பனை செய்யப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் நேற்று (4) தெரிவித்தார்.
ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் உலக சந்தையில் எரிவாயுவின் விலை 82.50 டொலரால் அதிகரித்துள்ளதாகவும், ஜூலை மாதத்தில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கருத்தில் கொண்டு, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 460 அல்லது 470 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும்.
பழைய விலைக்கே

எனினும் மக்கள் மீது சுமையை சுமத்தாமல் இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 3,690 ரூபாவிற்கும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 1,476 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
லிட்ரோ நிறுவனமும்

இதேவேளை லிட்ரோ எரிவாயு நிறுவனமும் விலை அதிகரிப்பில் மாற்றத்தை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.