கட்டண திருத்தத்தை மேற்கொள்ளவுள்ள லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் : லிட்ரோவை தொடர்ந்து நகர்வு
லிட்ரோ சமையில் எரிவாயுவை தொடர்ந்து, லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான தீர்மானம் நாளை (06) மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயுவின் விலையில் திருத்தங்களை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, தற்போது மற்றுமொரு கட்டண திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில் அதிகரிக்கப்பட்டது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன், 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
அத்துடன், 2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 668 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
வெதுப்பக உணவுகள்
இந்த நிலையில், எரிவாயுவின் விலை அதிகரித்தாலும் வெதுப்பக உணவுப் பொருட்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்படாதென அகில இலங்கை வெதுப்பக சங்கத்தின் தலைவர் என். கே ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.