தேரர்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு சட்டங்கள் கொண்டுவர வேண்டும்
நாட்டில் எதிர்வரும் காலங்களில் தேரர்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என எங்கள் மக்கள் சக்தி கட்சியின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டான் ப்ரியசாத் தெரிவித்தார்.
இன்று(23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்
“எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேராவின் இழப்பிற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
யுக்திய நடவடிக்கை
என்னை அரசியல் கட்சிக்கு கொண்டுவந்தவர் அவர். நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
யுக்திய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனை சிலர் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
யுக்திய நடவடிக்கை உண்மையிலேயே நல்லதொரு விடயம். யுக்திய நடைமுறையில் பொய் பிரச்சரங்க்களை முன்னெடுக்க வேண்டாம்.
போதைப்பொருட்களுடன் தொடர்புடையோருக்காக முன்னிலையாக வேண்டாம் என்றும் வழக்கறிஞர்களிடம் கோரிக் கொள்கிறேன்.
தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவித்தல்
ரத்ன தேரர் மட்டுமல்ல, மகாநாயக்க தேரர்களிடம் கோரிக்கொள்வது, தேரர்கள் அரசியல் நாட்டிலிருந்து முற்றாக நீக்கப்படவேண்டும்.
ஏனெனில் தேரர்கள் அரசியலுக்கு வருவதுடன் சாசனம் இழிவுக்குட்பட்படுத்தப்படுகின்றது. இதனை தேர்தல் ஆணைக்குழுவிற்கும் தெரிவிக்க வேண்டும்.
விஷ்வா புத்தாவுக்கு பெளத்த சாசனத்தில் வழங்கப்பட்ட தண்டனையை தேர்தலில் நிற்கும் தேரர்களுக்கும் வழங்கினால், அதாவது தேரர்களின் சாசன உறுப்புரிமையினை நீக்கினால் சாசனத்தினை இழிவுபடுத்தும் நபர்கள் குறையும் என நினைவூட்டிக் கொள்கிறேன்..” எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |