“ஈஸ்டர் தாக்குதல்” ரகசியங்களை அறிந்தவர் திடீரென அமெரிக்கா பறந்தார்
ஈஸ்டர் தாக்குதல் பற்றிய முக்கிய தகவல்களை அண்மையில் அம்பலப்படுத்தியிருந்த தேசிய பாதுகாப்பு பற்றிய ஆய்வுப் பணியகத்தின் முன்னாள் தலைவரான, சட்டத்தரணி அசங்க அபேகுணசேகர திடீரென அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 09ஆம் திகதி வலையொளி தளம் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அசங்க அபேகுணசேகர ஈஸ்டர் தாக்குதல் பற்றிய பல விடயங்களை வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக, அரச புலனாய்வு பிரிவு முன்னாள் தலைவராகிய நிலந்த ஜயவர்தன பல விடயங்களை மூடிமறைத்ததாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்த அந்நாட்டைச் சேர்ந்த பிரபல புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் தாக்குதல் இடம்பெற்ற அன்றைய தினத்தில் காலை 6.30 அளவில் தொலைபேசி ஊடாக நிலந்த ஜயவர்தனவுடன் தொடர்புகொண்டு, “இன்று தான் தாக்குதல் நடத்தப்போகின்ற தினம்” என்பதை தெரிவித்து எச்சரித்திருந்ததாக அந்த நேர்காணலின் போது அசங்க அபேகுணசேகர கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே நேர்காணலை வழங்கிய தினத்தன்று மாலையில் அவர், அமெரிக்கா சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.