வாக்கை பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் வாக்கைச் செலுத்தியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களுக்காக தமது பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்காக வேண்டி பட்டிருப்புத் தொகுதியிலுள்ள மக்களும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்புக்களில் கலந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு ஆகிய முன்று பிரதேசங்களிலும் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்புக்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பார்களும் தத்தமது ஆதரவாளர்களுடன் இணைந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.
இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியன் தனது வாக்கை பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் பதிவு செய்திருந்தார்.
