புதிய தலைமைத்துவ சபையை அமைக்கவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி : தேர்தலை முன்னிட்டு நகர்வு
ஐக்கிய தேசியக் கட்சியை முன்னகர்த்தி செல்வதற்காக அடுத்த வருடம் புதிய தலைமைத்துவ சபையொன்று அமைக்கப்படவுள்ளது.
இதனை கட்சியின் உறுப்பினரான ஹரிண் பெர்ணாண்டோ உறுதிப்படுத்தியதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்கப்படவுள்ள புதிய தலைமைத்துவ சபைக்கு கட்சியின் தலைவரும் சிறிலங்கா அதிபருமான ரணில் விக்ரமசிங்க சில அதிகாரங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபையின் அங்கத்தவர்கள்
இந்த தலைமைத்துவ சபையில் ருவான் விஜேவர்தன, ஹரின் பெர்னாண்டோ, வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க, சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் அங்கம் வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் தேர்தலை முன்னிறுத்திய கூட்டங்கள்
இதேவேளை, அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு, ரணில் விக்ரமசிங்க பல கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த கூட்டங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த கூட்டங்கள் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலிழந்துள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் : புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள இடர் முகாமைத்துவ நிலையம்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |