ஜி 20 அமர்வில் சீனாவுக்கு எச்சரிக்கை - இலங்கைக்கு ஆதரவு
இந்தியாவின் பெங்களுர் நகரில் இந்தியாவின் தலைமையில் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் அமர்வு இடம்பெற்றுவரும் நிலையில், இந்த அமர்வில் இலங்கைக்குரிய சர்வதேச நாணய நிதிய கடன் குறித்த ஆய்வுகளும் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில், இன்று இந்த அமர்வில் உரையாற்றிய அமெரிக்க நிதியமைச்சர் ஜெனட் யெலன் இலங்கைக்கு நிதி நிவாரணம் தேவை என வலியுறுத்தியுடன் சீனா மீதான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.
சீனாவுக்கு கண்டனம்
இலங்கைக்குரிய கடன் மறுசீரமைப்பில் சீனா 2 வருடங்களுக்கு அப்பால் செல்லமறுக்கும் நிலையில் அமெரிக்க நிதியமைச்சரின் இந்தக் கருத்து வந்துள்ளது.
அத்துடன், உக்ரைனில் ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்குரிய பொருளாதார ஆதரவு அல்லது ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை புறந்தள்ளும் சீனாவுக்கும் அவர் மீண்டும் எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மீறும் நாடுகள் எதிர்கொள்ளவேண்டிய கடுமையான விளைவுகள் குறித்தும் ஜெனட் யெலன் எச்சரித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்