புதுக்குடியிருப்பில் விசேட சோதனை: கைப்பற்றப்பட்ட பொருட்கள்!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் மற்றும் பெரல் என்பன இன்றையதினம் (05.11.2025) கைப்பற்றப்பட்டுள்ளன.
காவல்துறை விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு காவல்துறையினர் இன்றையதினம் (05.11.2025) காலை தேவிபுரம் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11,69,500 மில்லிலீட்டர் கோடா, செப்பு சுருள் , 7 பெரல்கள் என்பன புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் காவல்துறையினரின் வருகையை உணர்ந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





