கோட்டாபயவிடம் கற்றுக் கொள்ளுங்கள் :அநுர அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆலோசனை
பாதாள உலகக்குழு செயற்பாடுகளை இல்லாதொழிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் அவர் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருளை முற்று முழுதாக இல்லாதொழித்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதாள குழுவை ஒடுக்குதல்
பாதாள உலகக் குழு படுகொலைகளை இல்லாதொழிப்பது எவ்வாறு என்பதை கோட்டாபய நாட்டுக்கு செய்து காட்டினார் என குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் கடுமையான முறையில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் அவர் எவ்வாறு இதைச் செய்தார் என்பது குறித்து பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய சிறந்த தலைவர்
போர், பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் என்பனவற்றை இல்லாதொழிப்பதில் கோட்டாபய சிறந்த தலைவர் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டில் மிகவும் தோல்வியடைந்த ஓர் ஜனாதிபதி எனவும் அவர் நாட்டை சாப்பிட்டார் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
