அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை
இலங்கையில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் எதிப்பு போராட்டங்களுக்கு மத்தியில், அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் புதிய தவணைக்கான கல்வி நடவடிக்கைக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
விடுமுறை ஆரம்பத்திலிருந்து பாடசாலை நேரமும் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
முதலாம் தவணை தொடக்கம் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதியுடன் நிறைவடையும் காலப்பகுதிக்குள் பாடசாலை நேரத்தை பூர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், பாடசாலை விடுமுறைகள் உள்ளிட்ட பாடசாலை அட்டவணைகள் அதிபர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.