டீ.ஏ. ராஜபக்சவின் 54 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு
அமரர் டீ.ஏ. ராஜபக்சவின் (D. A. Rajapaksa) 54 ஆவது நினைவு தினம் தங்காலை மஹவெல வீதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு அருகில் இன்று இடம்பெற்றது.
அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa)ஆகியோரது தலைமையில் நினைவு தின நிகழ்வு மேற்கொள்ளப்பட்ட்து.புவக்தண்டாவ மகளிர் வித்தியாலயத்தின் மாணவிகள் டீ.ஏ.ராஜபக்ச நினைவு கீதத்தை இசைத்தனர்.
இதனை தொடர்ந்து அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபக்ச , ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ச(Shiranthi Wickramasinghe Rajapaksa) , சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardena), அமைச்சர்களான நாமல் ராஜபக்ச( Namal Rajapaksa) மற்றும் எஸ்.எம்.சந்திரசேன (S. M. Chandrasena)ஆகியோர் டீ.ஏ.ராஜபக்ச அவர்களது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செய்தனர்.
தங்காலை வகேகொட புராதன வஜிரகிரிய விகாராதிபதி மிரிஸ்ஸே தம்மவங்ஷ தேரர் இதன்போது அனுசாசனம் நிகழ்த்தினார்.
வீரகெடிய மெதமுலனவிலுள்ள டீ.ஏ.ராஜபக்ச மற்றும் பாரியார் தோன தந்தினா சிமரசிங்க திசாநாயக்க (Dona Thandina Simarasinghe Dissanayake) ஆகியோரது நினைவிடத்திற்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்த அரசுத்தலைவர் , பிரதமர் மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) ஆகியோர் அங்கு விளக்கேற்றி பெற்றோரை நினைவு கூர்ந்தனர்.