அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகள் மற்றும் தடுப்பூசி விடயத்தில் சுகாதார அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் எனினும், அமைச்சர் தற்போது பொறுப்பிலிருந்து தப்பிக்க முயற்சித்து வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல தடுப்பூசிகளை தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்திருப்பதும், அந்த மருந்துகளின் தரமற்ற தன்மையும், அந்த மருந்துகளைப் பயன்படுத்திய சில நோயாளிகளுக்கு ஏற்பட்ட ஒவ்வாமை எதிர்விளைவுகளும் அரசியல் அரங்கிலும் சமூகத்திலும் ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளன.
இன்று (19.12.2025) காலை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவிடம் இந்த நிலைமை தொடர்பில் கேள்வியெழுப்பினர்.
சுகாதார அமைச்சர்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போதைய அரசாங்கம் அறிமுகப்படுத்துவதாகக் கூறும் அரசியல் நெறிமுறைகளின்படி, சரியாக இருந்தால், சுகாதார அமைச்சர் இந்த நேரத்தில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.

எவ்வாறாயினும், தேவையான தகவல்களைப் பெற்ற பிறகு, சட்ட அடிப்படையில் அமைச்சருக்கு எதிராக சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் முறைப்பாடு அளிக்க எதிர்ப்பார்க்கிறோம்.
எனினும், இந்த சம்பவம் தொடர்பாக தற்போது தேவையான தகவல்களை சேகரித்து வருகிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 9 மணி நேரம் முன்