தடுப்பூசி போடாத நபர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு விடுத்துள்ள சுகாதார அமைச்சர்
முழுமையாக தடுப்பூசி போடாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இந்த சட்டத்தை அமுல்படுத்தப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சு கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொள்ளாது பொது இடங்களுக்கு சென்றால் மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டரீதியான தடை ஏதும் இல்லை என இன்று சட்டமா அதிபர் தனக்கு அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என சுகாதார சேவைப் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.