நாட்டிலுள்ள வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் (Coconut oil) விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பண்டிகை காலத்தில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் நுகர்வோர் விவகார அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பரிசோதிக்கப்படும் எனவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய்
மேலும், இந்த நடவடிக்கையானது நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறியும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள்
இந்த உலருணவு பொதிகளை இன்று (01.04.2025) முதல் 13 ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பருவகால உணவு பொதியை 2,500 ரூபாவுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த உலருணவுப் பொதிகளை நாடளாவிய ரீதியில் லங்கா சதொச விற்பனை நிலையம் மற்றும் COOPFED விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
