பதிவு செய்யப்படாத மதஸ்தலங்கள்: எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்
பதிவு செய்யப்படாத மதஸ்தலங்களை சுற்றிவளைத்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு கடிதம் அனுப்புமாறு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டின் சமயப் பதிவாளர்களுடன் புத்தசாசன அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பதிவு செய்யப்படாத மதஸ்தலங்கள் மூலம் மக்களை மதமாற்றம் செய்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைகள்
சமய விகாரைகள் மற்றும் பிக்குகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பிக்குகளுக்கும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிற்கும் இடையில் நீண்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் அதன்போது, கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையில் துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் பெயர்களை உள்ளிடும்போது, துறவிகளுக்கு வெனரபிள் என்றும், கன்னியாஸ்திரிகளுக்கு ரெவரெண்ட் என்றும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |