இலங்கையின் பிரபல சிங்கள பாடகி லதா வல்பொல காலமானார்!
Sri Lanka
By Shalini Balachandran
இலங்கையின் சிங்கள இசை வரலாற்றில் இசைக்குயில் என்று போற்றப்படும் லதா வல்பொல தமது 91 ஆவது வயதில் காலமானார்.
இந்தநிலையில் நேற்று (27) அவர் காலமானதாக குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
1934 ஆம் ஆண்டு பிறந்த இவர், தேவாலய இசைக் குழுக்களில் தனது இசைப் பயணத்தை ஆரம்பித்து பின்னர் வானொலி மற்றும் திரைத்துறையில் ஈடு இணையற்ற இடத்தைப் பிடித்தார்.
ஆயிரக்கணக்கான பாடல்
இதுவரை 600 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.

சிறந்த பின்னணி பாடகிக்கான சரஸவிய விருதுகள் உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச கௌரவங்களை அவர் பெற்றுள்ளார்.
இந்தநிலையில், அவரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்த மேலதிக விபரங்கள் அவரது குடும்பத்தினரால் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கரீபியன் கடற்பரப்பில் போர் பதற்றம்: அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பின் மதுரோவின் அதிரடி அறிவிப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்