அநுர அரசு தொடர்பில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு
"என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்" என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)இன்று(26) காலியில்(galle) வசிக்கும் மக்களிடம் கூறினார்.
மறைந்த மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் வசித்து வந்த காலியில் உள்ள கபுஹெம்பல வீட்டிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை விஜயம் செய்தார்.
"என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்"
அந்த நேரத்தில் உள்ளூர்வாசிகள் வீட்டைச் சுற்றி திரண்டனர். விக்டர் ஐவனின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு ரணில் விக்ரமசிங்க புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிக்கு வந்திருந்த குடியிருப்பாளர்கள் சாப்பிட அரிசி இல்லை என்றும் தேங்காய் இருநூறு ரூபாய்க்கு உயர்ந்துவிட்டதாகவும் கூறினர்.
"எங்கள் நம்பிக்கை நீங்கள்தான் ஐயா," என்று குடியிருப்பாளர்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறினர். இதன்போது உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, "என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |