வடக்கில் பௌத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு காவல்துறைக்கு பறந்த கடிதம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்துக்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டி ‘மக்கள் போராட்ட குடிமக்கள்’ அமைப்பு, அனுப்பிய கடிதம், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் வசிக்கும் பௌத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அந்த குழு, காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளரின் தகவல்
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள காவல்துறை ஊடகப் பேச்சாளர் எவ்.யு.வூட்லர்,
இந்த கடிதத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அனுப்பியுள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கை
குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கைக்காக காத்திருப்பதால் காவல்துறையினரால் இதுவரை உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்தர்கள் இனவாத நோக்கிலேயே வடக்கிலுள்ள பௌத்த ஆலயங்களுக்குச் செல்வதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் உரையாற்றியபோது கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து அடிப்படை உரிமைகளை மீறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |