சுரேஷ் சலேவின் மனைவி ஷானி அபேசேகரவிற்கு அவசர கடிதம்
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரான சுரேஷ் சலேவின் மனைவி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி வழங்குமாறு கோரியே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக அவரது மனைவி மற்றும் சட்டத்தரணி ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு இரண்டு தனித்தனி கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்
சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ள தனது கட்சிக்காரரின் நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பதும், அதுகுறித்த தகவல்களை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதும், அவரது உரிமைகளையும் நலனையும் உறுதி செய்வதும் தனது தொழில்முறைப் பொறுப்பு என்றும் சட்டத்தரணி அசித் சிரிவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது கட்சிக்காரருடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பது அவசியம் என்றும் சுட்டிக்காட்டும் அசித் சிரிவர்த்தன, அதற்காக அவரை தினமும் சந்திக்க அனுமதிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலிலிருந்து தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்