தபால்மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் இன்று
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.
கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு இன்றும் (25) நாளையும் (29) வாக்களிப்பை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச நிறுவனங்கள், காவல்துறை, முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 648,495 விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,000ஐ கடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
