போதைபொருள் கடத்தல்காரருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
Colombo
Sri Lankan Peoples
Law and Order
By Dilakshan
06 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
2018 ஆம் ஆண்டில், கிராண்ட்பாஸ், கெத்தாராம பகுதியில் நடத்திய சோதனையின் போது 5.9 கிராம் ஹெரோயினுடன் இந்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
தீர்ப்பு
அதனைதொடர்ந்து, சட்டமா அதிபர் சந்தேகநபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இந்த குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக அரசுத் தரப்பு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 15 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்