எப்போதும் மன அழுத்தமாக சோர்வாக உணர்கிறீர்களா..இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள்
சில நேரங்களில் தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது அலுவலகத்திலோ எந்தவொரு பிரச்சினைகளும் இல்லை என்றாலும் மன அழுத்தமாகவும் சோர்வாகவும் உணர்வோம். ஆனால் இதற்கு என்ன காரணம் என்றும் தெரியாமல் இருக்கும் அப்படி நீங்களும் உணர்கிறீர்கள் எனில் இந்த பதிவு உங்களுக்கானதே!
எப்போதும் அல்லது எதோ ஒருநாளில் திடீர் என்று மன அழுத்தத்தித்திற்கு உள்ளாகுபவர்களில் நீங்களும் ஒருவர் அதை என்னால் உறுதிப்படுத்தி கூறமுடியும் அதன் காரணமாகவே இந்த பதிவை வாசிக்க தொடக்கியிருக்கின்றீர்கள்.
இவ்வாறு உங்களை தொற்றிக்கொள்ளும் சோர்வு அல்லது மன அழுத்தத்தில் இருந்து எப்படி விடுபடலாம் என்பதை ஒரு சில படிமுறைகள் ஊடாக முயற்சித்து பாருங்கள் மாற்றத்தை உணரலாம்.
மன ஆரோக்கியம்
குறைந்தது அரை மணி நேரமாவது கண்களை மூடி நன்கு மூச்சை இழுத்து விட்டு தியானம் செய்து பாருங்கள்.
பிடித்த பாடல் கேட்பது, புத்தகம் வாசிப்பது இப்படி எதாவது செய்யுங்கள்.
இதனால் உங்கள் மனது சற்று இலகுவாகும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வதும் நம்மை பிரச்னைகளை மறந்து ஓய்வாக இருக்கச் செய்யும்.
தசைகள் இலகுவாகி உடலுக்குக் கிடைக்கும் புத்துணர்ச்சி நம் மனதிற்கும் உற்சாகமளிக்கும்.
எனவே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி இப்படி உங்கள் வசதிக்கு ஏற்ப எதாவது ஒன்றை தினமும் கடைபிடியுங்கள்.
காரணங்களை தவிருங்கள்
உங்களை மன அழுத்ததிற்கு கொண்டு செல்லும் விஷயங்களிலிருந்து விலகி இருங்கள்.
அவற்றை பற்றி சற்றும் சிந்திக்காத நாட்களை நோக்கி நகருங்கள்.
அவை தீவிரமான பிரச்சனை எனில் நீங்கள் சற்று மன அளவில் இலகுவானதன் பின் அவற்றை சரி செய்ய முற்படுங்கள்.
தூக்கம்
மன அழுத்தம், சோர்வு என உணரும்போது தூக்கம் கட்டாயம் தேவை.
ஏனெனில் அதுதான் நமக்கு முழு தெளிவை கொடுக்கும்.
எனவே சோர்வாக இரவெல்லாம் கண்டதை நினைக்காமல் நன்கு தூங்குங்கள்.
நல்ல தூக்கத்தை தினசரி பழக்கமாக்குங்கள்.
இவற்றை முழுமையாக பின்பற்றி வாருங்கள், நிச்சயம் மாற்றத்தை உணர முடியும்