திருகோணமலையில் பிக்கு ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் : காவல்துறையினரிடம் முறைப்பாடு
திருகோணமலை பொரலுகந்த ரஜமஹா விகாரை அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்ட பௌத்த பிக்கு ஒருவரிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மொரவெவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மொரவெவ- தெவனிபியவர இந்ரா ராம விகாரையின் விகாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி நேற்றுமுன்தினம் (11) இம்முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
அம்முறைப்பாட்டில் சொகுசு வெள்ளை வானில் நான்கு பேர் தனக்கு சொந்தமான இரண்டு விகாரைகளுக்கும் தேடி வந்ததாகவும், குறித்த வானில் வருகை தந்தவர்கள் யார் என்று தெரியாது எனவும் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அம்முறைபாட்டில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருகோணமலை இலுப்பை குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பொரலுகந்த ரஜமஹா விகாரையின் நிர்மாண பணிகளை இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னின்று செய்ததாகவும், அதனால் தனக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.