தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதி!
corona
batticolo
koralaipattru
By Shalini
மட்டக்களப்பு கோரளைப்பற்று கல்மடு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மருதநகர் கிராமம் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19.05.2021 ஆந் திகதி முதல் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தீர்மானத்திற்கு அமைவாக குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று 05.06.2021 முதல் குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியினால் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட
தீர்மானத்திற்கு அமைவாகவே குறித்த பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்