செவித்திறன் அற்றவர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம்
செவித்திறன் அற்றவர்களுக்கும் இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த 2022 ஆண்டு நவம்பர் 14,அன்று அமைச்சரவை தீர்மானத்தின்படி, கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதன்படி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம்
அத்தோடு, ஏற்கனவே இலங்கைக்கு வரும் வெளிநாட்டினருக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை விமான நிலையங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வன்ன தெரிவித்திருந்தார்.
மேலும், அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கும் பொறுப்பை, அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் ஒப்படைக்கும் வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்க்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |