வவுனியாவில் துயரம் - மின்னல் தாக்கி 20 வயது இளைஞன் பலி
Vavuniya
Death
Weather
Lightning Alert
By Thulsi
வவுனியாவில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த துயர சம்பவம் நேற்று (1) மாலை வவுனியா - செக்கடிப்பிலவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
செக்கடிப்பிலவு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஜோசப் அன்ரனி என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திலேயே பலி
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று மாலை வவுனியாவின் பல பகுதிகளில் பலத்த இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில், மேற்படி இளைஞர் அந்தப் பகுதியிலுள்ள மைதானத்தில் இருந்தவேளை, திடீரென மழை தீவிரமடைந்துள்ளது.
இதனால் அவர் அருகிலிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கிய வேளையில், எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்