தீபாவளி தினத்தன்று வட மாகாணத்தில் மூடப்படவுள்ள மதுபான சாலைகள்
Diwali
Northern Province of Sri Lanka
By Sumithiran
தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அறிவிப்பு
இந்த தீர்மானம் தொடர்பில், மது வரித் திணைக்களத்தால் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, ஆளுநர் செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபாவளி தினத்தன்று மதுபான சாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அமைப்புக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி